வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
வாகன இறக்குமதியை ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதியை ஆரம்பிக்க முடியுமா மற்றும் நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை போதுமானதா, இல்லையா என்பது தொடர்பில் குழு வழங்கும் அறிக்கைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

வாகன இறக்குமதி
இதேவேளை, வாகன இறக்குமதி தொடர்பில் அண்மையில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

1000 சிசிக்கு குறைவான எஞ்சின் திறன் கொண்ட வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஒரு வருட கால அவகாசம் வழங்கியுள்ளது என்ற செய்தி பொய்யானது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரஞ்சிகே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam