வாகன இறக்குமதி: ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை
வாகன இறக்குமதி மற்றும் திறந்த வாகன கொள்கைக்கு செல்வதா அல்லது வாகன இறக்குமதிக்கான குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உரிமங்களை வருடாந்தம் வழங்குவது தொடர்பான கொள்கையை தயாரிப்பதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று (01.11.2023) இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஜனாதிபதி நியமித்துள்ள குழு
அவர் மேலும் தெரிவிக்கையில், வாகன இறக்குமதி தொடர்பான கொள்கையை உருவாக்க ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்துள்ளார்.

வாகன இறக்குமதியில் வெளிப்படையான கொள்கையை வைத்திருக்க வேண்டுமா அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிங்கப்பூரில் உள்ளதைப் போன்ற ஒரு முறைக்கு செல்ல வேண்டுமா என்பது குறித்து அது ஆராயும்.
வாகன இறக்குமதிக்காக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் உரிமங்கள் மற்றும், வீதிகளில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கையை நிலையாக பராமரிக்க, குறிப்பிட்ட அளவு வாகனங்களை நாட்டிற்கு வெளியே எடுத்துச் செல்ல வேண்டும்.
மின்சார வாகனங்களின் பயன்பாடு
வழக்கமான டீசல் அல்லது பெட்ரோல் வாகனங்களுடன் ஒப்பிடும்போது மின்சார வாகனங்களின் பயன்பாட்டையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இங்கு எதிர்கால பொருளாதார நிலை, வீதிகளின் நிலை போன்ற பல்வேறு விடயங்களிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும், வீதி விபத்துகளின் பிரச்சினையும் இங்கு முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
You May like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri