இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
பணவீக்கம் குறைவதற்கு இணையாக அடுத்த இரண்டு மாதங்களில் சந்தை இயல்பு நிலைக்கு திரும்பும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
வங்கி வட்டி விகிதங்களும் இதன் போது குறையும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற அரசாங்க செய்தியாளர் மாநாட்டில், அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவ்வருடம் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் இறக்குமதி
இறக்குமதி கட்டுப்பாடுகளால் சுங்க திணைக்களத்திடமிருந்து கிடைக்கும் பாரியளவு வரி வருமானம் குறைவடைந்துள்ளது. வாகனங்களுக்கான இறக்குமதித் தடை இவ்வாண்டுகள் நீக்கப்பட மாட்டாது.
தற்போது சுமார் 900 பொருட்களுக்கான இறக்குமதித் தடை தொடர்ந்தும் காணப்படுகிறது. இவற்றில் 300 பொருட்கள் வாகனங்களுடன் தொடர்புடையவையாகும்.
எவ்வாறிருப்பினும் தொடர்ந்தும் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டால் அது சர்வதேச சந்தையில் கொடுக்கல் வாங்கல்களில் பாதிப்பினை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam