இலங்கையிலுள்ள வாகனங்களில் ஏற்பட்டுள்ள ஆபத்து
இலங்கையில் எயார் பேக்குடன் கூடிய வாகனங்கள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சில வாகனங்களில் எயார் பேக் இயங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறான வாகனங்களில் இருந்து எயார் பேக்கை நீக்குவது தொடர்பான நடவடிக்கைகளை குறிப்பிட்ட நிறுவனங்கள் நாட்டில் இலவசமாக மேற்கொள்ளும்.
நிறுவனங்களின் ஊடாக தருவிக்கப்படும் வாகனங்களுக்கு மாத்திரம் இந்த சந்தர்ப்பம் வழங்கப்படும்.
நேரடியாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எயார் பேக்கை அகற்றுவதற்கு வாகன உரிமையாளர்கள் பணம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விபத்து ஏற்படும் உயிராபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள இந்த எயார் பேக் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam
