கொழும்பில் நடுவீதியில் தீப்பற்றி எரிந்த காரால் ஏற்பட்டுள்ள பரபரப்பு
கொழும்பு கொம்பனி வீதியில் விமானப்படை தளம் பகுதிக்கு அருகில் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
குறித்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் வாகனம் தீப்பிடித்து எரிவதை காணொளியாக பகிர்ந்துள்ளார்.
தீயை அணைக்கும் பணி
இந்த சம்பவத்தில் காயங்களோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படை மற்றும் கொழும்பு தீயணைப்பு படையினர் இணைந்து வாகனத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த கார் திடீரென வீதியில் தீப்பற்றி எரிந்தமையால் அங்கு போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் கூட்டம் நிறைந்து ஓர் பரபரப்பான சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தீ அணைக்கப்பட்டு, வாகன போக்குவரத்து மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan