இலங்கையில் வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்! விலையில் திடீர் மாற்றம் (Video)
இலங்கையில் வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான தகவலொன்று வெளியாகியுள்ளது.
வாகன விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
அதன்படி சந்தையில் தற்போது வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரென்ஜிகே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அதிகரித்த வட்டி வீதம், எரிபொருள் விலை உயர்வு மற்றும் உதிரிபாகங்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாகவே வாகனங்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பழுதுபார்த்தல் கட்டணம் உயர்வு
வாகனங்களின் விலை குறைவடைந்த போதிலும் உதிரிபாகங்கள், வாகன திருத்தம் மற்றும் பழுதுபார்த்தல் என்வற்றுக்கான கட்டணங்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.