புதிய வாகன உமிழ்வு சோதனை திட்டம்! பொதுமக்கள் முறைப்பாடு செய்யலாம்
செப்டம்பர் 21 அன்று பூஜ்ய மாசு உமிழ்வு தினத்தை முன்னிட்டு மோட்டார் போக்குவரத்து துறை மேம்படுத்தப்பட்ட வாகன உமிழ்வு சோதனையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பூஜ்ஜிய உமிழ்வு தினம் என்பது புவி வெப்பமடைதலுக்கு நேரடியாக தொடர்புபடும் காற்று மாசுபாட்டை இல்லாத எதிர்காலத்தை கோருவதற்கான சர்வதேச செயற்பாட்டு நாளாகும்.
உமிழ்வு சோதனையானது ஒரு வாகனத்திலிருந்து வெளியாகும் புகை அல்லது மாசுகளின் அளவை அளவிடுகிறது. இது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் காற்று மாசுபாட்டின் வெளியீட்டைக் குறைக்கும்.
புதிய வாகன உமிழ்வு சோதனை திட்டம்
சோதனை ஹைட்ரோகார்பன்கள், கார்பன் டை ஒக்சைட், நைட்ரஜன் ஒக்சைட்,
கார்பன் மோனாக்சைட் மற்றும் பிற காற்று மாசுபாட்டின் அளவைக் கண்டறியும்.
இந்தநிலையில் புதிய வாகன உமிழ்வு சோதனை திட்டம் முற்றிலும் இலங்கையர்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸீரோ(பூஜ்ய) எமிஷன் இயக்கம் 2008 இல் ஆரம்பித்தது. அதன் நிறுவனர் கென் வாலஸ், கனடாவின் நோவா ஸ்கொட்டியாவில் ஒரு வலைத்தளத்தை வெளியிட்டார், அதில் செப்டம்பர் 21 ஐ பூஜ்ஜிய உமிழ்வு நாளாக அங்கீகரிக்கும் அறிவிப்புக்கு அழைப்பு விடுத்தார்.
இலங்கையில் சுற்றுப்புற அல்லது வெளிப்புற காற்று மாசுபாட்டின் முதன்மையான காரணமாக வாகனப்புகை வெளியேற்றம் கருதப்படுகிறது. இது கொழும்பு நகரில் மொத்த உமிழ்வில் 55 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறை
1998 இல் பொதுமகன் ஒருவர், தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் வழக்கில் உச்ச
நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் அமைச்சகம் வாகன உமிழ்வைக்
கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை வெளியிட்டது.
போக்குவரத்து அமைச்சகம் 2008 ஆம் ஆண்டு முதல் மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் கீழ் மாசு உமிழ்வு தரநிலைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் வாகன உமிழ்வு சோதனை திட்டத்தை செயல்படுத்துவதற்கும் வசதியாக விதிமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
அதன்படி, மோட்டார் வாகனங்களை சோதனை செய்து சான்றிதழ் வழங்குவதற்கு அங்கீகாரம் பெற்ற மையங்களை இயக்க மோட்டார் போக்குவரத்து துறை இரண்டு ஒப்பந்ததாரர்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்தநிலையில் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை
உறுதிப்படு;த்த புகையை வெளியிடும் வாகனங்களின் புகைப்படங்களை 0703500525 என்ற
எண்ணுக்கு வாட்ஸ்எப் அல்லது வைபர் மூலம் 0703500525 என்ற எண்ணுக்கு
அனுப்புமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.