மூதூர் உப்புக்காச்சிமடுவில் வாகன விபத்து: இருவர் காயம்
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் உப்புக்காச்சிமடு பகுதியில், இன்று (11) சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, உப்புக்காச்சிமடு கிராமப்பகுதியிலிருந்து பிரதான வீதிக்கு பிரவேசித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், கிண்ணியா பகுதியிலிருந்து மூதூர் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் காயமடைந்த இருவர் உடனடியாக மீட்கப்பட்டு மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தின் போது இரண்டு வாகனங்களும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மூதூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri