மொனராகலை பகுதியில் கோர விபத்து: இருவர் பரிதாபமாக பலி
மொனராகலை மாவட்டத்தின் செவனகல சந்தி, கினிகல்பலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
செவனகல சந்தியிலிருந்து கினிகல்பலஸ்ஸ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் விசாரணை
இந்த விபத்தில் செவனகல பிரதேசத்தை சேர்ந்த 35 வயது மற்றும் 46 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, அவிசாவளை - கொழும்பு வீதியில் ரக்ஷபான சந்திக்கு அருகில் கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை செலுத்திய வந்த வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam