தமிழர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பயணித்த வாகனம் தலைகீழாக கவிழ்ந்து விபத்து
கதிர்காமத்தில் ஏழுமலைக்கு பக்தர்களை அழைத்துச் சென்ற கெப் ரக வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
ஏழுமலையின் மேல் தளத்தில் இருந்து கீழ் தளம் நோக்கி பயணித்த கெப் ரக வாகனமே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின் போது, சாரதி உட்பட 07 பெண்களும் 10 வயது சிறுமியும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இவர்கள் சிறு காயங்களுடன் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா மற்றும் திருகோணமலையை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமையால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |