வவுனியா - செட்டிக்குளத்தில் வாகன விபத்து: இளைஞர் பலி
வவுனியா - செட்டிக்குளம், வாழவைத்தகுளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று (06.04.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் செட்டிக்குளம், வாழவைத்தகுளம் பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு அண்மையில் பயணித்த மோட்டார் சைக்கிளும், பட்டா ரக வாகனமும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது விபத்தில் படுகாயமடைந்த 21 வயதுடைய மோட்டர் சைக்கிள் சாரதியான அல்முதீன் மிஹ்ராஜ் என்ற இளைஞர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam