உலகில் புதிதாக உருவெடுத்துள்ள மற்றுமொரு பெருந்தொற்று
கோவிட் வைரஸின் கோரத் தாண்டவம் முடிவுக்கு வந்து இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ள
நிலையில், மற்றுமொரு பெருந்தொற்று பரவ ஆரம்பித்துள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இவ்வாறு பரவ ஆரம்பித்துள்ள பெருந்தொற்றாக தற்போது தனிமையே அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பரவும் பெருந்தொற்று
இந்த தனிமை என்பது பல தலைமுறைகளாக பலரை மிக மோசமாக பாதிக்கும் ஒன்றாக மாறி வருவதாகவும், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களையும் இந்த பெருந்தொற்றானது கடுமையாகப் பாதிப்பதாகவும் கூறப்படுகின்றது.
குறிப்பாக 45 முதல் 65 வயதான நடுத்தர வயதானவர்களையே இது கடுமையாகப் பாதிப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2002 முதல் 2020 வரை அமெரிக்கா மற்றும் 13 ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில் பல கோடி பேரைப் பாதிக்கும் தனிமையானது ஒரு மிகப் பெரிய பொதுச்சுகாதார பிரச்சினையாக கருதப்படுகிறது.
அத்துடன் தனிமை என்பது தொற்றுநோயை போல மிக வேகமாக சமூகத்தைப் பாதித்து வருவதாகவும், இந்த விடயத்தில் உடனடியாக கவனம் செலுத்தவில்லை என்றால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரிட்டன் மற்றும் ஜப்பான் போன்ற பிற நாடுகள் இந்த பிரச்சினையை சரி செய்யத்தனியாக அமைச்சகங்களை உருவாக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |