அரச திணைக்களங்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை : ஜனாதிபதி அறிவிப்பு
அரச திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம்(Anuradhapura) மாவட்ட சட்டத்தரணிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரச நிறுவனங்களில் இடம்பெறும் வீன்விரயத்தை ஒழிக்கும் திட்டத்தை ஏற்கனவே தொடங்கியுள்ளோம். இதுபற்றி விசாரித்து அறிக்கை அளிக்க பல நாடாளுமன்றக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
மேலும், நிபுணத்துவ அறிவைப் பெற்று அரச திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சில விடயங்களுக்கு பல திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் உள்ளன. எனவே, ஒட்டுமொத்த அரச கட்டமைப்பையும் மாற்ற வேண்டும்.
அத்துடன், எதிர்காலத்தில் மாகாண சபைகளுக்கு பரந்தளவிலான பணிகளை கையளிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றோம்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். எனவே, அடுத்த சில ஆண்டுகளில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்த செயலில் உள்ள திட்டங்களில் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இங்கிலாந்தும் இந்த நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1979 க்குப் பிறகு, ஒரு பாரிய மறுசீரமைப்பு ஏற்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |