முல்லைத்தீவில் வாகன விபத்து: பாடசாலை மாணவன் படுகாயம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயர்தர மாணவன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவமானது நேற்று முன்தினம் (02.07.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு, பரந்தன் வீதியில் மாலை நேர வகுப்பு முடிந்து வீதியால் மிதிவண்டியில் பயணித்த மாணவன் மீது வேகமாக சென்ற ஹயஸ் வாகனம் மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸ் விசாரணை
இதன்போது, வாகனத்தில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் ஏற்றிசெல்லப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வாகனத்திற்குள் காணப்பட்ட 9 தேக்க மரக்குற்றிகள் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்திசெல்லப்பட்ட மரக்குற்றிகள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த உடையார் கட்டு தெற்கு பகுதியினை சேர்ந்த 17 வயதுடைய மாணவன் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் மரக்கடத்தலில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தனை சேர்ந்த ஹயஸ் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு நேற்று(03) புதுக்குடியிருப்பு பொலிஸாரால் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது சந்தேக நபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த விபத்துச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam