பிரித்தானிய பொதுத்தேர்தல் : வெளியான கருத்துக்கணிப்பு
பிரித்தானிய பொதுத்தேர்தலில், இன்று மக்கள் வாக்களிக்கவுள்ள நிலையில் கருத்துக்கணிப்புகளில் தொடர்ந்தும் தொழிற்கட்சி அதிக ஆதரவு காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் காணப்பட்ட நிலையில் மாற்றமில்லை தொழில்கட்சிக்கான ஆதரவு சிறிய அளவில் குறைந்துள்ளது எனினும் அந்த கட்சியே தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது என செய்தி வெளியாகியுள்ளது.
கென்சவேர்ட்டிவ் கட்சியின் 14 வருடகால ஆட்சியின் பின்னர் கெய்ர் ஸ்டாமெரின் தொழில்கட்சி 2022 முதல் கருத்துக்கணிப்புகளில் முன்னிலையில் காணப்படுவதாக கார்டியன் தெரிவித்துள்ளது.
கன்சவேட்டிவ் கட்சிக்கு 20 வீத ஆதரவு
தற்போதைய கருத்துக்கணிப்புகளின் படி தொழில்கட்சிக்கு 40 வீத ஆதரவு காணப்படுவதாகவும் பிரதமர் ரிஷி சுனாக்கின் கன்சவேட்டிவ் கட்சிக்கு 20 வீத ஆதரவு காணப்படுவதாகவும் சீர்திருத்த கட்சிக்கு 15 வீத ஆதரவும் லிபரல் ஜனநாயக கட்சியினருக்கு 11வீத ஆதரவும் பசுமை கட்சிக்கு 5.8 வீத ஆதரவும் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.
கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் தொழில்கட்சிக்கு 326 ஆசனங்கள் கிடைக்கலாம் கென்சவேர்ட்டிவ் கட்சிக்கு 127 ஆசனங்களும் லிபரல் ஜனநாயக கட்சியினருக்கு 50 ஆசனங்களும் கிடைக்கலாம் என சுட்டிக்காட்டப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |