யாழ்.வடமராட்சி கிழக்கில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான வாகனம் !
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு மாமுனை சந்தி பகுதியில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது இன்று(29.1.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மருதங்கேணியில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த குறித்த வாகனம் மாமுனை சந்தி பகுதியில் நிறுத்தி இருந்த வாகனத்தின் மீது மோதி வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
விசாரணை
விபத்தின் போது வாகனத்தில் பயணித்தவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த விபத்து நடந்த பகுதியில் உரிய வீதி குறியீடுகள் இல்லை என்பதனாலேயே இந்த பகுதியில் அதிகளவான விபத்துக்கள் இடம் பெற்று வருவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

