சந்தைகளில் மரக்கறிகளின் விலை குறைப்பு
இலங்கை சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் தளம்பல் நிலையில் உள்ளன.
தற்போதைய நிலவரம்படி காய்கறி சந்தையில் கறிமிளகாய் தவிர மற்ற காய்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தை நிலவரம்
இதற்கமைய பேலியகொட மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் கறிமிளகாயின் மொத்த விலை 750 முதல் 800 ரூபா வரை பதிவாகியுள்ளது.
தம்புள்ளையில் கறிமிளகாயின் மொத்த விலை 600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை கெப்பட்டிபொல பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோகிராம் கறிமிளகாயின் மொத்த விலை 600 ரூபாவாகவும், நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் கறிமிளகாயின் மொத்த விலை 690 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மரக்கறிகளின் விலை குறைப்பு
எவ்வாறாயினும்,பேலியகொட மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 300 முதல் 320 ரூபா வரை பதிவாகியுள்ளது.
இதேவேளை தம்புள்ளையில் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 260 ரூபாவிற்கும் குறைவான விலையில் பதிவாகியுள்ளமையும் விசேட அம்சமாகும்.
கரட், வெண்டைக்காய், பீட்ரூட் என பல மரக்கறிகளின் மொத்த விலை 250 ரூபாய்க்கும் குறைவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.