வடமராட்சியில் மரக்கறிகளின் விலை உச்சம் தொட்டது..!
வடமராட்சியில் மரக்கறிகளின் விலை உச்சம் தொட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோகிராம் தக்காளி 800 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் கரட் 700 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் எலுமிச்சை 1200 ரூபாக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் ஒரு கிலோகிராம் பயிற்றங்காய் 500 ரூபாய்கும், ஒரு கிலோகிராம் மரவள்ளி 250 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு 240 ரூபாவிற்கும் விற்பனையாகும் அதேவேளை தேங்காய் 120 ரூபாவிலிருந்து 220 ரூபாய் வரையும், விற்பனையாகுகின்றன.
விலை உயர்விற்கான காரணம்

வடக்கில் உள்ளூர் விவசாயிகள் பலர் இந்த பருவத்தில் மரக்கறிச் செய்கையை குறைத்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தம்புள்ளை போன்ற தென் பகுதிகளிலிருந்து மரக்கறிகள் கொண்டு வரப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும், போக்குவரத்துச் செலவும் நாடளாவிய ரீதியில் பதிவாகும் சீரற்ற காலநிலையும் மரக்கறிகளின் விலை உயர்விற்கு காரணமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் கிழக்கே வங்காள வளைகுடா கடல் பகுதியில் கொந்தளிப்பு! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை