மரக்கறி விநியோகம் முற்றாக ஸ்தம்பிக்கும் ஆபத்து:வர்த்தகர்கள் சங்கம்
மரக்கறி உற்பத்திகளை சந்தைக்கு கொண்டு செல்லுதல் மற்றும் நாடு முழுவதும் விநியோகிப்பது முற்றாக ஸ்தம்பிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலையேற்றமே காரணம்
மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமையே இதற்கு காரணம் எனவும் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
கமத்தொழில் வளர்ச்சி குறித்து அரசாங்கம் எவ்வித அக்கறையும் காட்டாது எடுக்கும் முடிவுகள் காரணமாக மரக்கறிகளை பயிரிடும் உழவர்கள் முற்றிலும் பயிர் செய்கையில் இருந்து விலகிச் செல்வதை நிறுத்த முடியாது போகும் என சங்கத்தின் தலைவர் அருண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
வியாபாரிகளின் வருகை 95 வீதமாக வீழ்ச்சி
நாடு முழுவதும் இருக்கும் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு மரக்கறிகளை மொத்தமாக கொள்வனவு செய்ய வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை நேற்று 95 வீதமாக வீழ்ச்சியடைந்து காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
விநியோகமும் 90 வீதம் குறைந்து போனதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
