பயணத்தடை காலத்திலும் அதிக விலையில் விற்கப்படும் மரக்கறிகள்

Price Jaffna Farmer Vegetable
By Thileepan Jun 06, 2021 03:43 AM GMT
Report

வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆதரவுடன் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலையில் மரக்கறிகள் கொள்வனவு செய்யப்பட்டு பயணத்தடை நேரத்தில் அதிக விலையில் மரக்கறிகள் விற்பனை செயயப்பட்டு வருகின்றது.

கோவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடு பூராகவும் பயணத்தடை நடைமுறையில் உள்ள நிலையில் வவுனியா மாவட்டத்திலும் மக்கள் தமக்கு தேவையான பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் மக்களுக்கு தேவையான மரக்கறி வகைகளை வழங்குவதற்கு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தாலும், பிரதேச செயலகத்தாலும் பலருக்கும் அனுமதிபத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுமதி பெற்றவர்கள், ஏற்கனவே பாதிப்படைந்துள்ள விவசாயிகளிடம் இருந்து மிகக்குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்து இரண்டு, மூன்று மடங்கு இலாபம் வைத்து மக்களுக்கு மரக்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாளாந்த கூலி வேலை செய்து அன்றாட சீவியத்தை போக்கும் மக்களும் மரக்கறிகளை வாங்க முடியாத அளவுக்கு விலை ஏற்றம் காணப்படுகின்றது.

இதன் மூலம் உற்பத்தியாளரும், பெறுனரும் பாதிப்படைய இடைத்தரகரான வியாபரிகளே அதிக இலாபத்தை பெறுகின்றனர். இதற்கு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களமும் உடந்தையாக செயற்படுகின்றது.

வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் மரக்கறிகளின் கொள்வனவு விலை மற்றும் விற்பனை விலை தொடர்பில் கட்டுப்பாட்டு விலையை அறிவித்துள்ளது. அந்த விலையில் விவசாயிகள் பாதிக்கும் வகையிலும், இடைத்தரக்கர்களாக செயற்படும் வியாபாரிகள் அதிக லாபம் பெறும் வகையிலும் அந்த விலைப்பட்டியல் அமைந்துளளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக விவசாயிகளிடம் இருந்து 80 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படும் கத்தரிக்காய் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 60 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படும் வெண்டிக்காய் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுன்றது. சில இடங்களில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கும் மரக்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் கமநல அபவிருத்தி திணைக்களம் விவசாயிகளின் நலனை கருத்தில் கொள்ளாது செயற்படுவதாக பல்வேறு தரப்புகளில் இருந்தும் குற்றச்சாட்டுகள் எழுத்துள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் குறித்த திணைக்களத்திற்கு எதிரான பதிவுகள் வைரலாகி வருகின்றன. 

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US