மரக்கறி விற்பனை போர்வையில் போதைப்பொருள் விற்பனை
மரக்கறி விற்பனை என்ற போர்வையில் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபர் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தற்காலிக மரக்கறி விற்பனை நிலையம் எனும் போர்வையில் சூட்சுமமாக போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்றது.
விசேட சோதனை
இதனடிப்படையில் புதன்கிழமை (18) அன்று விசேட சோதனை நடவடிக்கை அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது குறித்த மரக்கறி விற்பனையில் ஈடுபட்டவர் தன்னை கைது செய்ய பொலிஸார் முயற்சிப்பதை கண்டு அருகில் உள்ள வயல்வெளிக்குள் தப்பி ஓடியுள்ளார்.
எனினும் புலனாய்வு பிரிவினரும் பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து கடும் சிரமத்துடன் சந்தேக நபரை பின்தொடர்ந்து கைது செய்தனர்.
மேலதிக விசாரணை
அத்துடன் குறித்த மரக்கறி விற்பனை செய்யும் கடையில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நிந்தவூர் பொலிஸ் நிலைய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan