இலங்கை தமிழர்களை ஏமாற்றிய சீமான்: வீரலட்சுமி வெளியிட்ட பரபரப்பு காணொளி
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி பணம்பறித்தாக இளைஞர் ஒருவர் பேசும் குரல்பதிவை தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி வெளியிட்டுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி, சீமான் விடயத்தில் முறைப்பாடு அளித்த விவகாரத்தில், தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி குரல் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் விஜயலட்சுமியை ஆதரித்ததால் வீரலட்சுமிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையேயான மோதல் வலுப்பெற்று இதுவரையிலும் தொடர்கிறது.
பகிரங்க குற்றச்சாட்டு
சீமானுக்கு எதிராக புதிய காணொளி ஒன்றை வீரலட்சுமி வெளியிட்டு இலங்கைத் தமிழர் விடயத்தில் புதிய பரபரப்பைக் கூட்டியுள்ளார்.
அதில், இலங்கைத் தமிழர்களுக்காக எண்ணற்ற தமிழர்கள் பாடுபட்ட நிலையில், இலங்கை தமிழர்களை சீமான் ஏமாற்றி பணம் பறித்துள்ளார் என குற்றம்சாட்டியுள்ளார்.
ஈழத் தமிழருக்கு குடியுரிமை வாங்கித் தருவதற்காக சீமான் பணம் பெற்றதாக வீரலட்சுமி குற்றச்சாட்டு#Seeman #Veeralakshmi pic.twitter.com/G8wd1TvrAu
— Raj ✨ (@thisisRaj_) October 1, 2023
மேலும் அந்த காணொளியில் இலங்கைத் தமிழில் பேசும் இளைஞர் ஒருவர், ஆர்.கே. நகர் தேர்தல் தொடங்கி பல தேர்தல் செலவுக்காக சீமானுக்கு பணம் கொடுத்துள்ளதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், மௌனித்திருந்த வீரலட்சுமி - சீமான் மோதல் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பமாகியுள்ளதாக கூறப்படுகிறது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 41 நிமிடங்கள் முன்

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
