இந்துக்களின் உணர்வுகளை சிதைக்கும் நோக்கமே வெடுக்குநாறி மலை விவகாரம் : கருணா கூட்டணி கண்டனம்
இந்து சமயத்தவர்களின் உணர்வுகளை சிதைக்கும் செயற்பாடுகளை இனிவரும் காலங்களில் பார்த்து மௌனித்திருக்க முடியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஜெயா சரவணன் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த (08) சிவராத்திரி தினத்தன்று நீதிமன்ற அனுமதியுடன் பூஜை வழிபாடுகளில் ஈடுபடச் சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று (12.03.2024) வெளியிட்டுள்ள அறிக்கையிலே தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
கவலைக்குரிய விடயம்
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
”மக்களின் பாதுகாவலர்களாக நிற்க வேண்டிய பொலிஸாரே மக்களையும் , அவர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் மிக கொடூரமாக நடந்து கொண்டது எமக்கு அதிர்ச்சியையும் கோபத்தினையும் ஏற்படுத்தியிருந்தது.
இதே போன்ற செயற்பாடுகள் பரவலாக எமது வணக்க தலங்களில் இந்து சமயத்தவர்களின் உணர்வுகளை சிதைக்கும் நோக்கில் நடந்து வருவதனை இனி வரும் காலங்களில் பார்த்து மௌனித்திருக்க மாட்டாேம்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் , வன்னி மாவட்ட புத்திஜீவிகள் ஏன் இதற்கான ஒரு எதிர்வினையை , நடவடிக்கையை எடுக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது.
இனவாத வன்முறை
மதங்களை, சட்டங்களை தாண்டி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
வருடத்திற்கு ஒரு தடவை வரும் சிவராத்திரி தினத்தை மக்கள் நினைவுகோருவதையும், அதனை கொண்டாடுவதையும் தடுக்கும் முகமாக பரவலாக சிவதலங்களில் பொலிஸாரினால் ஏற்படுத்தப்பட்டு வந்த வன்முறைகளை மிகவும் வன்மையாக கண்டிப்பதோடு இதன் பின்னணியில் புத்த பிக்குகள் இருப்பது மிகவும் வேதனையளிக்கின்றது.
மேலும், பொலிஸார் நீதிமன்ற உத்தரவுகளுக்கு கூட மதிப்பளிக்காது பௌத்த பிக்குகளின் உத்தரவுகளுக்கே பாதுகாப்புத் தரப்பினரால் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவாத வன்முறையை தூண்ட முயற்சிப்பது போல் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam
