வெடுக்குநாறிமலை ஆலய வழிப்பாடு! சுமந்திரன் வெளியிட்ட தகவல் (video)
வவுனியா - நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் நாளைய தினமே திருவுறுவ விக்கிரகங்கள் என்பவற்றை ஒப்படைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று (27.04.2023) அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் சேதப்படுத்தப்பட்ட வழக்கு சென்ற திங்கட்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்றத்தால் உத்தரவு
இதன்போது வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கங்களை நடத்துவதற்கு பக்தர்கள் செல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்காமலிருக்க வவுனியா நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் வெடுக்குநாறி பிரதேசத்தில் பூஜை வழிபாடுகள் நேற்று (26.04.2023) ஆரம்பமாகி உள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,