பூந்தோட்டம் பகுதியில் குடைசாய்ந்த பாரவூர்தி - 3 மணிநேரமாக போக்குவரத்து ஸ்தம்பிதம்
வவுனியா - பூந்தோட்டம் பிரதான வீதியில் பாரவூர்தியொன்று வீதியினை வீட்டு விலகி குடை சாய்ந்துள்ளது.
இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து 3 மணிநேரமாக ஸ்தம்பித்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த வீதியில் வயல் வெளியினை அண்மித்த பகுதியில் பாலம் நிர்மாண பணிகளுக்காக வீதியோரத்தில் போக்குவரத்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் இன்றையதினம் பொருட்களை ஏற்றிய பாரவூர்தியொன்று பூந்தோட்டம் பிரதான வீதியூடாக பூந்தோட்டம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் பாலம் நிர்மாணப்பணி இடம்பெற்று வருகின்ற பகுதியின் மறுபக்கத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது பாரவூர்தியின் ஒரு பகுதி வீதியினை விட்டுக் கீழிறங்கி குடைசாய்ந்துள்ளது.
இதன் காரணமாக வவுனியா - பூந்தோட்டம் வீதியூடான போக்குவரத்து சுமார் 3 மணிநேரமாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
இதனையடுத்து பொதுமக்கள் மாற்று பாதையூடான பயணத்தினை மேற்கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan