வவுனியா தெற்கு சிங்கள பிரதேசபை தேசிய மக்கள் சக்தி வசம்
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த சுதர்சன சாமர வீரக்கோன் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் பிரதி தவிசாளராக ஜக்கிய மக்கள் சக்தியின் குணபால சரத்மது ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்கான தவிசாளர், உப தவிசாளர் தெரிவுகள், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி தலைமையில், பிரதேசபை மண்டபத்தில் இன்று(16.06) மாலை நடைபெற்றது.
இதன்போது, தவிசாளர் தெரிவிற்கு இருவரது பெயர்கள் பிரேரிக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தி சார்பில் சுதர்சன சாமர வீரக்கோன், மற்றும் சுயேட்சைகுழு சார்பில் கசுன் சுமதிபால ஆகியவர்களின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டது.
குறித்த தெரிவினை இரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடாத்துமாறு 10 பேரும் பகிரங்கமாக நடாத்துமாறு 7 பேரும் வாக்களித்தனர்.
போட்டியின்றி தெரிவு
பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் தவிசாளர் தெரிவுகள் இரகசிய வாக்களிப்பின் மூலம் நடத்தப்பட்டது. வாக்களிப்பு முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினருக்கு 12வாக்குகள் கிடைக்கப்பெற்றது.

சுயேட்சை உறுப்பினருக்கு 5 வாக்குகள் கிடைக்கப்பெற்றது. தேசியமக்கள் சக்தியின் உறுப்பினர் சுதர்சன சாமர வீரக்கோன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இதனையடுத்து, உப தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது. உப தவிசாளராக ஜக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குணபால சரத்மதுவின் பெயர் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களால் பிரேரிக்கப்பட்டது.

வேறு உறுப்பினர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படாமையினால் போட்டியின்றி அவர் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri