வவுனியா விவசாய காணியை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்க வட மாகாண ஆளுநர் உத்தரவு
வவுனியா - யாழ்.வீதியில் அமைந்துள்ள அரச விதை உற்பத்தி விவசாய பண்ணையை பிரதேச செயலாளரை பொறுப்பேற்குமாறு வட மாகாண ஆளுநரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர்பாக வட மாகாண ஆளுநரினால் (10.03.2023) ஆம் திகதி கடிதத்தின் பிரகாரம் பிரதேச செயலாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விவசாய பண்ணைக்கு புதிய காணி
ஜனாதிபதியின் வவுனியா விஜயத்தின் போது அபிவிருத்தி குழுவின் தலைவர் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் விவசாய நடவடிக்கைகளுக்கான விவசாய பண்ணைக்கு ஓமந்தை பகுதியில் 100 ஏக்கர் காணி வழங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் தற்போது விவசாய பண்ணை உள்ள 65 ஏக்கர் காணியை அபிவித்தி செயற்பாடுகளுக்காக பொறுப்பேற்குமாறும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆளுநரின் குறித்த செயற்பாடு காரணமாக விவசாய அமைப்புக்கள் மற்றும் விவசாயிகள் தமது விசனத்தினை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த காணியை வவுனியா பொருளாதார மத்திய நிலையம் மற்றும் சர்வதேச
கிரிக்கட் மைதானத்திற்காக கோரியபோது அக் கோரிக்கைகள்
நிராகரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 22 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan
