வவுனியாவில் புகையிரதக்கடவை ஒலி சமிக்ஞையில் கோளாறு: அச்சத்தில் மக்கள்
வவுனியா - தாண்டிக்குளம் புகையிரதக் கடவையில் பொருத்தப்பட்டுள்ள ஒலி சமிக்ஞை, கோளாறு காரணமாக தொடர்ந்து ஒலி எழுப்பி இயங்கிக் கொண்டிருப்பதால் மக்கள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்கின்றனர்.
ஒலி சமிஞ்சையில் ஏற்பட்ட கோளாறு
குறித்த ஒலி சமிஞ்சை தன்னிச்சையாக இன்று (18.10.2022) காலை முதம் ஒலியெழுப்பிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீதி வழியாக போக்குவரத்து செய்யும் மக்கள் புகையிரதம் வருகின்றது என்ற அச்சத்தில் பயணத்தை தொடருவதில் அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அச்சத்தில் மக்கள்
ஒலி எழுப்பி சிவப்பு மின்குமிழ் ஒளிர்ந்தபடி உள்ளதனால் அப் புகையிரதக் கடவையூடாக வேலைக்குச் செல்வோர், பொதுமக்கள் எனப் பலரும் புகையிரதம் வருகின்து என அச்சியுள்ளனர்.
இதேவேளை குறித்த கடவையில் கடந்த 2018 ஆம் ஆண்டு புகையிரத விபத்து ஏற்பட்டு இளைஞரொருவர் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



