வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக் குழுவின் அர்ப்பணிப்பால் இளைஞர் காப்பாற்றப்பட்டார்!
அதிவேக மோட்டார் சைக்கிள் விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான 19 வயது இளைஞர் ஒருவர், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பன்முக மருத்துவக் குழுவின் விரிவான சிகிச்சை மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் வெற்றிகரமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்த விபத்து 2026 ஏப்ரல் 19ஆம் திகதி இரவு சுமார் 9.00 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இந்த இளைஞர், கடுமையான பலவகை உடற்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவசர பரிசோதனைகளில் வயிற்றுப் பகுதியில் கடுமையான உள்இரத்தக்கசிவு மற்றும் இரு கீழ் கால்கள் மற்றும் இடுப்பு பகுதியில் பல எலும்பு முறிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அவசர அறுவைச் சிகிச்சை
இளைஞரின் நிலை மிகவும் ஆபத்தானதாக இருந்ததால், உடனடியாக அவசர அறுவைச் சிகிச்சை Consultant General Surgeon Dr. Rajiv Nirmalasingam மற்றும் அறுவைச் சிகிச்சைக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

அறுவைச் சிகிச்சையின் போது, கல்லீரலில் Grade 4 அளவிலான காயம், மண்ணீரலில் (Spleen) Grade 2 காயம், வலது சிறுநீரக கிழிவு (Right Kidney Laceration), வயிற்று துளை (Stomach Perforation), குடல் அடிபாடு (Bowel Contusion), மற்றும் சிறுகுடல் மற்றும் பெருங்குடலில் பல துளைகள் (Multiple Perforations) காணப்பட்டன.
இக்காயங்கள் அனைத்தும் வெற்றிகரமாக சிகிச்சை செய்யப்பட்டு இரத்தக்கசிவு கட்டுப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நோயாளர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, Consultant Anaesthetist Dr. Devaki மற்றும் Dr. Nageswaran இன் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதில் தீவிர சிகிச்சைப் பிரிவின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. பின்னர் எலும்பியல் சிகிச்சைகள் மற்றும் முறிவு சிகிச்சைகள் Consultant Orthopedic Surgeon Dr. Majooran இனால் மேற்கொள்ளப்பட்டது.
பல வாரங்களாக தொடர்ச்சியாக வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த மருத்துவ சேவையின் மூலம் நோயாளர் சிறப்பாக குணமடைந்து, 2026 மே 5 ஆம் தேதி வீடு திரும்பினார்.
இந்த வெற்றிகரமான சிகிச்சை, District General Hospital Vavuniya மருத்துவர்களும் சுகாதார பணியாளர்களும் இணைந்து அர்ப்பணிப்புடன் வழங்கும் உயிர்காக்கும் மருத்துவ சேவையின் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
விஜய் குறித்து ரசிகர்களுக்கு தெரியாத விஷயத்தை கூறிய இயக்குனர் லிங்குசாமி... என்ன தெரியுமா? Cineulagam
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam