உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆளுநருடன் முக்கிய கலந்துரையாடல்
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தால் (யு.என்.டி.பி.) எமது மாகாணத்தில் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை இன்னும் வினைத்திறனான முறையில் திட்டமிட்டு வடிவமைக்க முடியும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
டேவிட் சிலட்டரி மற்றும் கெட்டலினா சலசார் ஆகியோருக்கும் வட மாகாண ஆளுநருக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று(21.05.2026) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள்
யு.என்.டி.பி. நிறுவனம் வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் முன்னெடுத்த பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான விரிவான மதிப்பீடுகளை மேற்கொள்வதும், அவற்றின் தற்போதைய நிலைப்பாடுகள் மற்றும் அடைவுகளை ஆராய்வதுமே இந்த சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.

இதன்போது, கடந்த காலத் திட்டங்களின் படிப்பினைகளைக் கொண்டு எதிர்காலத்தில் மாகாணத்தின் தேவைப்பாடுகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் ஆளுநரின் இணைப்புச் செயலாளரும் கலந்து கொண்டுள்ளனர்.

