வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கண்ணீர் மல்க நீதி வேண்டி கவனயீர்ப்பு ஊர்வலம்
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கண்ணீர் மல்க நீதி வேண்டி கவனயீர்ப்பு ஊர்வலம் வடக்கு - கிழக்கு தமிழர் தாயக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கத்தினர் கண்ணீர் மல்க நீதி வேண்டி வவுனியாவில் கவனயீர்ப்பு ஊர்வலத்தினை முன்னெடுத்தனர்.
வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்கள் 3111 வது நாளான நேற்றையதினம்(27) குறித்த ஊர்வலத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.
கவனயீர்ப்பு ஊர்வலம்
வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து ஆரம்பமான இந்த ஊர்வலம் மணி கூட்டுச் சந்தி வழியாக ஏ9 வீதியை அடைந்து அவர்களுடைய போராட்ட கொட்டகையை வந்தடைந்திருந்தது.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை தாங்கியவாறும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களை தாங்கியவாறும் ஊர்வலத்தில் ஈடுபட்ட தாய்மார் அங்கு கோஷங்களை எழுப்பி கண்ணீர்மல்ல ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் தமது போராட்டத்தினை நிறைவு செய்தனர்.





துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan
