பெட்டி - படுக்கையுடன் கிளம்பும் சந்திரிக்கா.. வெளியான தகவல்!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பில் உள்ள நிதாஹஸ் மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதற்காக தனது பொருட்களை தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது.
அண்மையில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதி உரிமைகள் நீக்கச் சட்டத்தின்படி, முன்னாள் ஜனாதிபதிகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டுள்ளது.
கால அவகாசம்
இருப்பினும், அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற நவம்பர் 30ஆம் திகதி வரை கால அவகாசம் கோரியிருந்தார்.

ஆனால், அவர் தற்போது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதற்காக தனது பொருட்களை தயார் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் அவர் புறப்படுவார் என்றும் அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

