க.பொ.த உயர்தரப்பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள்,கருத்தரங்குகள் என்பன 4 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பரீட்சைகள் முடியும் வரை இந்த தடை நடைமுறையில் இருக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதி
உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாடு முழுவதும் 1665 மையங்களில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சை அடுத்த ஆண்டு பெப்ரவரி 17ஆம் திகதி முதல் பெப்ரவரி 26ஆம் திகதி வரை நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |