வவுனியா சமுதாய பொலிஸ் குழு அனுராதபுரம் மற்றும் மிகிந்தலைக்கு நட்புறவு விஜயம்
வவுனியா(Vavuniya) தலைமைப் பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்பட்ட சமுதாய பொலிஸ் குழுத் தலைவர்கள் அனுராதபுரம் மற்றும் மிகிந்தலை ஆகிய பகுதிகளுக்கு இன்று(06) நட்புறவு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில் பிரஜா பொலிஸ் பொறுப்பதிகாரி பிறேமரட்ண அவர்களின் தலைமையில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பிரிவுக்குட்பட்ட 17 கிராம அலுவலர் பிரிவுகளில் இருந்து சமுதாய பொலிஸ் குழுத் தலைவர்கள் சென்றிருந்தனர்.
கலந்துரையாடல்
இவ்வாறு அழைத்து செல்லபபட்டவர்கள் மிகிந்தலை இராஜமகாவிகாரைக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன், பௌத்த பிக்குளின் ஆசிகளையும் பெற்றுக் கொண்டனர்.
அதன் பின் அனுராதபுரம் கதிரேசன் ஆலயம், அனுராதபுரம் புனித பூமி, லங்காராமய விகாரை, சிறி மகாபோதி, திரப்பனை ஆகிய பகுதிகளுக்கு சென்றிருந்ததுடன் சகோதர மொழி மக்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
வவுனியாவில் இருந்து சென்ற சமுதாய பொலிஸ் குழுத் தலைவர்களுக்கும், அனுராதபுரம் சமுதாய பொலிஸ் குழுத் தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
குறித்த செயற்திட்டமானது, சமுதாய பொலிஸ் ஊடாக நட்புறவை ஏற்படுத்தி, இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் முகமாக குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |