வவுனியாவில் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சடலமாக மீட்பு
வவுனியா - வீரபுரத்தில் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, வீரபுரம் பகுதியில் வசித்து வந்த குறித்த நபர் கால்நடைவளர்ப்பு மற்றும் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் கூறியள்ளனர்.
03 பிள்ளைகளின் தந்தையான சுப்பையா மருதன் என்ற 78 வயதுடைய முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரால் மீட்பு
இந்நிலையில் குறித்த நபர் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போன நிலையிலே நேற்று (09.01) மாலை விவசாய செய்கையினை மேற்கொள்ளும் காணிக்கு அருகில் உள்ள கல்குவாரி குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சடலம் செட்டிகுளம் பொலிஸாரால் இரவு மீட்கப்பட்டதுடன், சடலத்தினை திடீர் மரண விசாரணை அதிகாரி க.ஹரிபிரசாத் பார்வையிட்டிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
