இஸ்ரேல் நாட்டை வெறுக்கும் சுஜீவ சேனசிங்கவுக்கு வந்த அழைப்பு..!
இலங்கை - இஸ்ரேல் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் அங்குரார்ப்பணக் கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுத்து அனுப்பப்பட்ட கடிதம் தவறுதலாக வெளியிடப்பட்டது என்றும் அதை திரும்பப் பெற்றுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறித்த சங்கத்தில் இணையுமாறு அழைப்பு கடிதம் அனுப்புவதில் விடுக்கும் அறிவிப்பு தவறுதலாக விடுக்கப்பட்டதாகவும் அதை இரத்துச் செய்யுமாறு அனைத்து தொடர்புடைய தரப்பினருக்கும் எழுத்து பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சுஜீவ சேனசிங்க தனது முகநூல் பகத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்ற அங்குரார்ப்பணக் கூட்டத்தில்
நான் அறியாமல் தவறதலாக நடந்த குறித்த சம்பவத்திற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இலங்கை - இஸ்ரேல் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்புரிமையை இரத்துச் செய்யுமாறு அனைத்து தொடர்புடைய தரப்பினருக்கும் எழுத்து பூர்வமாக அறிவித்துள்ளேன் என்றும் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை - இஸ்ரேல் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தில் செப்டம்பர் 4ஆம் திகதிக்கு முதல் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்மொழியப்பட்ட சங்கத்தில் பதிவு செய்து, செப்டம்பர் 12 ஆம் திகதி (இன்று) நாடாளுமன்றத்தில் நடைபெறும் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan