வவுனியாவில் 8 வயது சிறுவனுக்கு 15 வயது சிறுவனால் நேர்ந்த விபரீதம்
வவுனியாவில் 8 வயது சிறுவன் ஒருவனை வன்கொடுமை செய்ததாக 15 வயது சிறுவன் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (28.08.2023) இடம்பெற்றுள்ளது.
பாடசாலை முடிவடைந்து மேலதிக வகுப்புக்காக வவுனியா, வெளிக்குளம் பகுதிக்கு சென்ற 8 வயது சிறுவன் ஒருவனை அப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து நேற்று மாலை 15 வயது சிறுவன் வன்கொடுமை செய்துள்ளார்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
இதன்பின்னர், 8 வயது சிறுவன் வீடு சென்ற பின் தனக்கு நடந்த சம்பவத்தை வீட்டிற்கு தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த சிறுவன் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து 15 வயது சிறுவன் வவுனியா பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வவுனியா பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
