வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரிக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரிக்கு கோவிட் தொற்று நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த அதிகாரிக்குச் சுகவீனம் ஏற்பட்டதையடுத்து துரித அன்டிஜன்
பரிசோதனையினை முன்னெடுத்திருந்தார்.
இதன்போது அவருக்கு கோவிட் தொற்று நோய் நேற்று (05) உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வி.திலீபனை தொடர்பு கொண்டு கேட்டபோது, தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக்கொண்ட மையினால் கோவிட் 19 இற்கான அறிகுறிகள் மற்றும் பாதிப்புக்களை மிகக் குறைவான அளவிலேயே உணர்வதாகத் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam

குக் வித் கோமாளி சீசன் 6 ரசிகர்களுக்கு வந்த ஒரு தகவல்.. திடீரென நடந்துள்ள மாற்றம், என்ன தெரியுமா? Cineulagam
