வவுனியாவில் இரவோடு இரவாக மாநகர சபையால் அதிரடியாக அகற்றப்பட்ட மசாஜ் நிலையம்
வவுனியா, தேக்கவத்தை பகுதியில் அனுமதியின்றி திறக்கப்பட்ட மசாஜ் நிலையம் மாநகர சபையால் இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது.
வவுனியா, தேக்கவத்தை, 15ஆம் ஒழுங்கையில் மசாஜ் நிலையம் ஒன்று இன்று(02.07) மாலை திறக்கப்பட்டிருந்தது.
அதன் பெயர் பலகை பிரதான வீதியிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பில் பொது மக்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.
அதிரடி நடவடிக்கை
இச்சம்பவம் தொடர்பில் தொலைபேசியில் மாநகர சபைக்கும் சமூக ஆர்வலர்களால் தெரியப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, குறித்த இடத்திற்கு சென்ற மாநகர சபை மேயர் சு.காண்டீபன், பிரதி மேயர் ப.கார்த்தீபன், பொது சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர், மசாஜ்நிலையம் என்னும் பெயரில் நிறுவப்பட்ட பெயர் பலகைகளை அகற்றி இருந்ததுடன், மாநகர சபையின் அனுமதியின்றி மசாஜ் நிலையத்தை திறக்க முடியாது எனவும் அறிவுறுத்தியிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


