வவுனியாவில் மின்கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்: ஒருவர் பலி
வவுனியா, மன்னார் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று(17.02.2025) மாலை இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மன்னார், பறயநாலங்குளம் பகுதியில் இருந்து இரண்டு இளைஞர்கள் வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
வவுனியா - மன்னார் வீதியில் உள்ள பம்பைமடுவை அண்டிய பகுதியில் குறித்த மோட்டர் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அதில் பயணித்த மற்றைய நபர் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் அநுராதபுரம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபரே மரணமடைந்தவராவார். விபத்துச் சம்பவம் தொடர்பாக பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 16 மணி நேரம் முன்
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri