முல்லைத்தீவில் மாணவிகளுடன் தவறாக நடக்க முயற்சி செய்த பொலிஸ் உத்தியோகத்தர்
முல்லைத்தீவில் மதுபோதையில் பாடசாலைக்குள் நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாணவிகளுடன் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.
முல்லைத்தீவு(Mullaitivu) - மல்லாவி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.
மதுபோதையில் பொலிஸ் உத்தியோகத்தர்
இவர், முல்லைத்தீவிலுள்ள ஒரு பாடசாலைக்குள் மதுபோதையில் சிவில் உடையில் புகுந்து மாணவிகளை மலசல கூடத்துக்கு வருமாறு அழைத்து துஸ்பிரயோகத்தில் ஈடுபட முற்பட்ட போது கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
பாடசாலை விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று(17) மாலை மூன்று மாணவிகளுடன் அவர் இவ்வாறு தவறாக நடக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது, மாணவிகள் குறித்த விடயத்தை வெளியே கூறியதன் பின்னர் அங்கிருந்தவர்கள் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருடன் முரண்பட்டனர்.
முறைப்பாடு
இச்சம்பவம் குறித்து மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மதுபோதையில் இருந்தார் என்பதனை உறுதிப்படுத்துவதற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும், பொலிஸ் தரப்பு குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை தப்பிக்க வைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்றும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri

அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri
