ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் வவுனியா மாவட்ட அணி சாதனை
வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் வவுனியா(Vavuniya) மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட வீர வீராங்கனைகளில் ஆண்கள் அணி முதலாம் இடத்தினையும், பெண்கள் அணி இரண்டாம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
குறித்த போட்டி நிகழ்ச்சி கடந்த 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்ட முள்ளி/வித்தியானந்தா கல்லூரி உள்ளரங்கில் நடைபெற்றது.
குத்துச்சண்டை போட்டி
இந்த போட்டியில் வவுனியா மாவட்டம் ஆண்கள் அணி சார்பில் 5 தங்கம் , 1வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்களை பெற்று முதலிடத்தையும், பெண்கள் அணி சார்பில் 4 தங்க பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதேவேளை, பயிற்றுவிப்பாளர் நிக்சன் ரூபராஜ் நெறிப்படுத்தலில் இந்த வீர வீராங்கனைகள் தயார்படுத்தப்பட்டு குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்களை பெற்று பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |