உயர்தரப் பரீட்சை காரணமாக வவுனியா மத்தியஸ்தர் சபை பிரதேச செயலகத்தில் செயற்படும்!
உயர்தரப் பரீட்சை காரணமாக மத்தியஸ்தர் சபைகள் பிரதேச செயலகத்தில் செயற்படும் என நீதி அமைச்சின் மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் இ.விமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகுவதால் சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இயங்கி வந்த மத்தியஸ்த சபை வவுனியா பிரதேச செயலக மண்டபத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 1மணி வரை செயற்படும்.
அதுபோல் வவுனியா குடியிருப்பு உள்ள இலங்கை திருச்சபை தமிழ் கலவன் ( சீசீரிஎம்எஸ்) பாடசாலையில் செயற்பட்டு வந்த வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபை வவுனியா பிரதேசச் செயலக மாநாட்டு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி தொடக்கம் மதியம் 1 மணி வரை செயற்பபடும் எனவே, மத்தியஸ்தர் சபையால் அழைக்கப்பட்டவர்கள் மற்றும் முறைப்பாடு செய்ய செல்பவர்கள் உயர்தரப் பரீட்சை முடியும் வரை பிரதேச செயலகத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று ஆற்றுப்படுத்தல்களை களை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam