வவுனியா மாநகரசபை மேயர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு
வவுனியா மாநகரசபை மேயர் பக்கச் சார்பாக செயற்படுவதாக மாநகர சபை உறுப்பினர் சி.பிறேமதாஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது மாநகர சபையின் கன்னி அமர்வு கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்றது.
வவுனியா மாநகரை அழகூட்டும் பொருட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானங்களில் ஒன்று, நடைபாதை வியாபாரிகளுக்கான இடங்களை ஒதுக்கி அவர்களுக்கான இடத்தை அடையாளப்படுத்தி வழங்கி அதன் பின் அவ் நடைபாதை வியாபாரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதற்கு புறம்பாக மாநகரசபை முதல்வர், துணைமுதல்வர் ஆகியோர் மாநகரசபையில் உள்ள நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கான கால அவகாசம் கொடுக்கப்படவில்லை.
இது அரசியல் அழுத்தங்களால் செய்யப்படுகிறது.