வவுனியாவில் உள்ள பாடசாலையில் பௌதிக வளப்பற்றாக்குறையால் சிரமப்படும் மாணவர்கள்
வவுனியா (Vavuniya) - வடக்கு மாறாஇலுப்பபை தமிழ் வித்தியாலயத்தில் போதிய கட்டிட வசதியின்மை மற்றும் பௌதிக வளப்பற்றா குறை என்பவற்றால் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக காணப்படுகின்ற மாறாயிலுப்பை பகுதியில் அமைந்துள்ள மாறாயிலுப்பை தமிழ் வித்தியாலயத்தில் 70இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்
மரநிழல்களில் வகுப்பறை
குறித்த பாடசாலையில் போதிய வகுப்பறை வசதிகள் இன்மையால் குறித்த மாணவர்கள் குறிப்பிட்ட சில வகுப்புகள் மர நிழல்களில் இயங்குகின்றன.
அத்துடன், ஆசிரியர் ஓய்வு அறையாக தற்காலிக கொட்டகை ஒன்றே காணபடுகின்றது.
இதனை, விட குறித்த பாடசாலை விளையாட்டு முற்றம் காட்டு யானைகளால் சேதமாக்கப்பட்டுள்ளது. எனவே, அப்பாடசாலையின் வகுப்பறை வசதிகள் மற்றும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |