சீன நாட்டவர் ஒருவருக்கு பிரித்தானியாவில் கடுமையான தண்டனை
பிரித்தானியாவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி என அடையாளப்படுத்தப்பட்டுள்ள சாவோ சூ என்ற சீன நாட்டவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பொலிஸாரினால் நீண் காலமாக மிகவும் பாலியல் குற்றவாளிகளில் ஒருவர் என்று அடையாளப்படுத்தப்பட்ட சீன நாட்டவருக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திட்டமிட்ட குற்றச்செயல்
லண்டன் பெருநகர பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலின்படி, 33 வயதான சாவோ சூ, பல்கலைக்கழக மற்றும் தொழில்முறை வலையமைப்புகளில் தனது பதவியைப் பயன்படுத்தி பெண்களை குறிவைத்து, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, சில பாதிக்கப்பட்டவர்களை போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியா மற்றும் சீனாவில் அவரது வெளிநாட்டுப் பார்வைக்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் கண்டறிந்ததாக செய்திகள் கூறுகின்றன.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவரது குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட நிலையிலேயே அவருக்கு தற்போது கடுமையான தண்டனையான ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Social Mediaவால் விமர்சனத்துக்குள்ளான வடக்கு - கிழக்கு இளைஞர் சமூகம்.. என்ன தான் நடக்கின்றது நாட்டில்!
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |