தமிழர் பகுதியில் மாடு வாங்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்

Vavuniya Northern Province of Sri Lanka
By Thileepan Jun 28, 2023 03:11 PM GMT
Report

வவுனியா ஓமந்தையில் மாடுகள் விற்பதற்கிருப்பதாக தெரிவித்து மல்லாவியை சேர்ந்த நபரொருவரிடம் பணத்தை திருடிக்கொண்டு சிலர் தலைமறைவாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மல்லாவியை சேர்ந்த ஒருவருடன் அண்மையில் வவுனியாவை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகியுள்ளார் 

இந்நிலையில் அண்மையில் தொடர்புகொண்ட குறித்த நபர் ஓமந்தையில் மாடுகள் விற்பனைக்கிருப்பதாகவும் உடனடியாக வந்தால் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மாடுகள் விற்பனை

தமிழர் பகுதியில் மாடு வாங்க சென்றவருக்கு நேர்ந்த சோகம் | Vavuniya Mallavi Money Robbery

எனினும் மல்லாவியை சேர்ந்தவர் தற்போது பணம் இல்லை எனவும் அதனால் ஒரு சில நாட்களின் பின்னர் வாங்குவதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது வவுனியாவில் வசிப்பவர் தனது அண்ணாவிற்கு பணம் அவசரம் தேவைப்படுவதால் உடனடியாக விற்கவேண்டியுள்ளது, பணத்துடன் வாருங்கள் என கூறியுள்ளார்.

இந்நிலையில் நகைகளை அடகு வைத்து மல்லாவியில் இருந்து ஓமந்தைக்கு வருகை தந்தவரிடம் ஓமந்தை வைத்தியசாலை பகுதியில் வைத்து பத்து இலட்சம் ரூபா பணத்தை பெற்ற நபர் சற்று தூரம் அழைத்து சென்று மாடுகள் சிலவற்றை காட்டியுள்ளார்.

குறித்த மாடுகளுடன் வேறு இருவர் நின்ற நிலையில் மாடுகளை பொலிஸாருக்கு தெரியாது வேறு பாதையால் கொண்டு வந்து தருவதாக தெரிவித்ததுடன் பணத்தை பெற்றமைக்காக கடிதம் எழுத வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

திருப்பி அனுப்பிய பொலிஸார்

தமிழர் பகுதியில் மாடு வாங்க சென்றவருக்கு நேர்ந்த சோகம் | Vavuniya Mallavi Money Robbery

இதன்போது ஓமந்தையில் உள்ள கடையொன்றில் பணத்தை பெற்றவர் காகிதாதி ஒன்றை வாங்க சென்ற போது மாடு வாங்க வந்தவரும் சென்றுள்ளார்.

இதன்போது மாடு கொண்டு செல்லும்போது வீதியை விட்டு வேறு இடத்துக்கு சென்றுவிட்டதாக கூறி மாடு வாங்க வந்தவரை அவ்விடத்திற்கு செல்லுமாறு கூற அவரும் சென்றுள்ளார்.

அங்கு சென்ற மல்லாவியை சேர்ந்த மாடு வாங்க வந்தவர், மாட்டையும் பணத்தை கொண்டு சென்றவர்களையும் அங்கு காணவில்லை என்பதால் கடிதம் எழுதுவதற்காக காகிதாதி வாங்க சென்றவரிடம் மீண்டும் சென்றுள்ளார்.

எனினும் அவரும் அங்கு இல்லாத நிலையில் பணத்தை இழந்து செய்வதறியாது நின்றுள்ளார்.

இந்நிலையில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடளிக்க சென்றபோது பத்து இலட்சத்திற்கு மேல் என்பதால் வவுனியாவில் உள்ள குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர்கள் தாம் முறைப்பாட்டை எடுக்க முடியாது மீண்டும் ஓமந்தையில் முறைப்பாட்டை பதிவு செய்யுங்கள் என திருப்பி அனுப்பிய நிலையில் பணத்தையும் இழந்து முறைப்பாடும் செய்ய முடியாத நிலையில் மல்லாவியில் இருந்து மாடு வாங்க வந்தவர்கள் செய்வதறியாதுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US