முகநூலில் அவதூறை ஏற்படுத்தியதாக வவுனியா சட்டத்தரணி சங்க செயலாளர் முறைப்பாடு
முகநூலில் அவதூறை ஏற்படுத்தியதாக இருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸாரிடம் வவுனியா சட்டத்தரணிகள் சங்க செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் நேற்று (16.11.2022) தெரிவித்துள்ளார்.
காணி உறுதி மோசடி தொடர்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணி உட்பட 6 பேர் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த செய்தியை முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்த நபர்கள் இருவர் வவுனியாவைச் சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணியும், வவுனியா சட்டத்தரணிகள் சங்க செயலாளருமான அன்ரன் புனிதநாயகமின் பெயரையும் தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்து அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மான நஷ்ட வழக்கு
இதன்மூலம், வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்திற்கும், சட்டத்தரணிகளுக்கும் அவதூறு ஏற்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பில் மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் சட்டத்தரணிகள் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
