இந்தியாவின் அதானி குழுமத்தின் கொழும்பு துறைமுக முனையம் தொடர்பில் வெளியான தகவல்
இந்தியாவின் அதானி குழுமம் மற்றும் அதன் பங்காளர்கள் 840 மில்லியன் டொலர் மதிப்புள்ள கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய விரிவாக்கத்தை திட்டமிட்ட காலத்தை விட பல மாதங்களுக்கு முன்பே முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதனூடாக 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அதன் கொள்கலன் திறனை இரட்டிப்பாக்கி சுமார் 3.2 மில்லியன் அலகுகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முனையத்தின் பங்குகளில் அதானி துறைமுகங்கள் நிறுவனம் 51%, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் 34% மற்றும் மீதமுள்ளவற்றை இலங்கை துறைமுக அதிகாரசபையும் வைத்திருக்கின்றன.
இலஞ்ச குற்றச்சாட்டு
அமெரிக்காவில் இலஞ்ச குற்றச்சாட்டுகளை அதானி நிறுவனம் எதிர்கொண்டதை தொடர்ந்து இந்த திட்டத்துக்கு அதானி நிறுவனத்துக்கு அமெரிக்க வழங்க முன்வந்த 553 மில்லியனை டொலரை அமெரிக்கா மீளப்பெற்றது.
எவ்வாறாயினும், அதன் பணிகள் தடையின்றி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
