போராட்டத்தில் குதித்த முத்துநகர் விவசாயிகள்
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களை அபகரித்து தனியார் கம்பனிகளுக்காக சூரிய மின் சக்தி திட்டத்துக்கு வழங்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது நேற்றையதினம் (17)திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
மக்கள் போராட்ட முண்ணனியின் செயற் குழு உறுப்பினர் வசந்த முதலிகே உட்பட விவசாய சம்மேளனங்களின் பிரதிநிதிகள் ,முத்து நகர் விவசாயிகளும் கலந்து கொண்டு தங்களது அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை மீட்டு தருமாறு போராட்டத்தில் பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டிருந்தனர்.
தொடர் போராட்டம்
விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பி கொடு, நெல் வயல்கள் இல்லாமல் நாங்கள் மண்ணையா சாப்பிடுவது, பொய்கள் வேண்டாம் என கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது கருத்துரைத்த விவசாயிகள், தற்போது மழை ஆரம்பிக்கவுள்ள நிலையில் விவசாய செய்கைக்கான தயார் நிலைபடுத்த வேண்டியுள்ளது.
மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது நிலங்களை தருவதாகம் சோளர் திட்டம் இல்லாத நிலங்களில் விவசாய செய்கை ஆரம்பிக்க முடியும் என கூறிவிட்டு தொடர்ந்தும் கம்பனிகளுக்கு விளை நிலத்தை வழங்குகின்றனர்.
குறித்த போராட்டத்தை தொடர்ந்தும் உண்ணாவிரதமாக நடாத்தவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
